#Video: ஐயோ.. எங்களை கொல்லப்போறாங்க..  காப்பாத்துங்க.. கோவையில் காதல் ஜோடி கூப்பாடு, கதறல்.!



coimbatore-love-married-couple-kidnap-attempt-by-girl-p

கோவை மாவட்டத்தை சேர்ந்த காதல் ஜோடி நடுரோட்டில் சுங்கச்சாவடி அருகே கடத்தப்பட்டதாக பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது. 

வீடியோவில் பேசிய பெண்ணின் தந்தை, எனது மகளும் - இளைஞரும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். அவர்களை சேர்ந்து வாழ வைக்க நாங்கள் அழைத்து செல்கிறோம். அவர்கள் இருவரும் அவர்களாக பயந்து இவ்வாறு செய்துவிட்டார்கள்" என்று தெரிவிக்கிறார். 

காதல் ஜோடி வீடியோவில் பேசுகையில், "எங்களை காப்பாற்றுங்கள். நாங்கள் காவல் துறையினர் முன்னிலையில் காதல் திருமணம் செய்துகொண்டோம். எங்களை கொலை செய்ய அழைத்து செல்கிறார்கள். அண்ணா எங்களை காப்பாற்றுங்கள். நாங்கள் திருமணம் செய்துகொண்டதற்கான ஆதாரம் உள்ளது. எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள். 

அவர்களின் கைகளில் ஆயுதம் வைத்துள்ளார்கள். நாங்கள் இருவரும் காரின் கதவை திறக்கவில்லை என்றால், எங்களை காருக்குள் வைத்தே கொலை செய்திருப்பார்கள். எனக்கு அப்பா வேண்டாம், குடும்பம் வேண்டாம். அவனே போதும். எனக்கு அவள் வேண்டும். எங்களை கொலை செய்ய பார்க்கிறார்கள். ஜாதி பார்க்கிறார்கள். காப்பாற்றுங்கள்" என்று கூறுகிறது.