தமிழகம்

பெண்களின் உடையணிந்து பெண்கள் விடுதியில் திருட்டு‌.. 19 வயது இளைஞன் கைது.. பரபரப்பு தகவல்..!!

Summary:

பெண்களின் உடையணிந்து பெண்கள் விடுதியில் திருட்டு‌.. 19 வயது இளைஞன் கைது.. பரபரப்பு தகவல்..!!

மாணவிகளின் விடுதியில், பெண்கள் உடை அணிந்து திருட்டு சம்பவம் நிகழ்த்திய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மருதமலை சாலை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் இரண்டு பிளாக்குகளில் மாணவிகளின் விடுதிகள் உள்ளது. இந்த மாணவிகளின் விடுதிகளில் சில வாரங்களாக மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்துள்ளனர். இதுகுறித்து மாணவிகள் புகாரளித்த நிலையில், நடவடிக்கை எடுக்காததால் கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து மாணவிகளின் விடுதி வளாகத்தில் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டது. தற்போது மீண்டும் இரவு நேரத்தில் ஆயுதத்துடன் மர்மநபர் சுற்றித்திரியும் வீடியோவை கண்ட மாணவிகள் அதனை காவல்துறையினரிடம் காட்டி புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வடவள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

​அப்போது சந்தேகத்திற்குரிய ஒரு இளைஞர் பெண்களின் உடைகளை போட்டு சுற்றித்திரிந்தது தெரியவந்தது. மேலும், இவர் கல்வீராம்பாளையத்தை சேர்ந்த சுரேந்திரன் (வயது 19) என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து இவர் பெண்களின் உடைகளை அணிந்து இரவு நேரத்தில் மாணவிகளின் விடுதியில் லேப்டாப் மற்றும் செல்போன்களை திருடி வந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக அவரை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Advertisement