தமிழகம்

கோவை: நண்பனின் மனைவியுடன் கள்ளக்காதல்.. நண்பனை நொறுக்கியெடுத்து, கணவர் செய்த பரபரப்பு சம்பவம்..!

Summary:

கோவை: நண்பனின் மனைவியுடன் கள்ளக்காதல்.. நண்பனை நொறுக்கியெடுத்து, 2 இலட்சம் கேட்டு மிரட்டிய பெண்ணின் கணவர்..!

தனது மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த நண்பனை அடித்து நொறுக்கிய கணவன், மனைவியின் கள்ளகாதலனான நண்பனிடம் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் நடந்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாய்பாபா காலனி, கே.கே. புதூர் கிராமத்தை சேர்ந்த 29 வயது இளைஞர், சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில், "நான் காந்திபுரத்தில் செயல்பட்டு வரும் பார்சல் நிறுவனத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறேன். கடந்த சில வருடத்திற்கு முன்னர், எனது நண்பரின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது. 

பின்னாளில் எங்களின் பழக்கம் கள்ளக்காதலாக மாறவே, எனது நண்பர் வீட்டில் இல்லத்தை சமயத்தில் நண்பரின் மனைவியுடன் உல்லாசமாக இருந்து வந்தேன். அவ்வப்போது இருவரும் வெளியே சென்றும் உல்லாசமாக இருந்து வந்தோம். இந்த நிலையில், எங்களின் கள்ளக்காதல் விவகாரம் நண்பருக்கு தெரியவந்து, அவர் எங்களை கண்டித்தார். தனது மனைவியுடன் கொண்டுள்ள கள்ளக்காதல் உறவை கைவிட கோரிக்கை வைத்தார்.

ஆனால், கள்ளக்காதல் பழக்கத்தை கைவிடாமல் தொடர்ந்து வந்த நிலையில், நண்பரின் வீட்டிற்கு அவருக்கே தெரியாமல் சென்று கள்ளகாதலியுடன் உல்லாசமாக இருந்து வந்தேன். சம்பவத்தன்று, எனது வீட்டில் இருக்கையில் நண்பர் மற்றும் அவரின் 6 நண்பர்கள் என் வீட்டில் நுழைந்தனர். 

என்னை சரமாரியாக தாக்கி, ஆபாசமாக என்னை வீடியோ எடுத்து வைத்தனர். இந்த விடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவோம் என்றும், அதனை வெளியிடாமல் இருக்க ரூ.2 இலட்சம் வேண்டும் என்று மிரட்டினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள சாய்பாபா காலனி காவல் துறையினர், 6 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Advertisement