கல்லூரி மாணவர்களிடம் வழிப்பறி: 3 கல்லூரி மாணவர்கள் கைது.!

கல்லூரி மாணவர்களிடம் வழிப்பறி: 3 கல்லூரி மாணவர்கள் கைது.!


Coimbatore 3 Arrested robbery 

 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள், தற்போது வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. 

அங்குள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டம் பயின்று வரும் தனுஷ் (வயது 19), அசாத் (வயது 19), ராம்குமார் (வயது 23), கெல்வின் (வயது 22) மாணவர்கள் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். 

இவர்கள் கல்லூரி மாணவர்களிடம் கத்தியை காண்பித்து மிரட்டி மடிக்கணினி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறித்து திருட்டு வழக்கில் சிக்கி இருக்கின்றனர்.