வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள நல்ல பாம்பு! பாம்பை பிடிக்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள நல்ல பாம்பு! பாம்பை பிடிக்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!


cobra-entered-into-house

கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் என்னும் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி. இன்று காலை இவரது வீட்டில் சுமார் 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஓன்று புகுந்துள்ளது. வீட்டிற்குள் பாம்பு புகுந்ததை அறிந்த அந்த பகுதி மக்கள் சரஸ்வதியின் வீட்டை சூழ ஆரம்பித்தனர்.

பின்னர் இதுகுறித்து பாம்பு பிடிக்கும் வீரர் ஒருவருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து அவர் சரஸ்வதியின் வீட்டிற்கு வந்து பாம்பை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு பாம்பு வீட்டின் கூரை மேல் இருப்பதை அவர் கண்டுபிடித்தார்.

snake

பாம்பை பிடிக்க முயற்சிக்கும்போது பாம்பு படம் எடுத்து ஆடியுள்ளது. பாம்பு படம் எடுத்ததை பார்த்ததும் வீட்டின் உரிமையாளர் சரஸ்வதி சாமி ஆட ஆரம்பித்துவிட்டார். அது அம்மன் என்றும், அந்த பாம்பை பிடிக்க கூடாது எனவும் கூறிக்கொண்டே சாமி ஆடியுள்ளார் சரஸ்வதி.

இதனால் அந்த பாம்பை பிடிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் ஸரஸ்வதி சோர்வடைந்து அமைதி ஆனதும் அந்த பாம்பை பிடித்து ஒரு டப்பாவில் அடைத்து வனப்பகுதியில் விட்டுள்ளனர்.