விலையில்லா உணவு மேலும் நீட்டிப்பு.. தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!cm-extends-free-food-on-amma-unavagam

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த நிபந்தனைகளுடன் கூடிய பொது முடக்கம் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மட்டும்  5.7.2020 வரை தீவிர பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஜூன் 30 ஆம் தேதி வரை அம்மா உணவகங்களில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா உணவு வழங்கப்பட்டு வந்தது. தற்போது தீவிர பொதுமுடக்கம் நீடிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஜூலை 5 ஆம் தேதி வரை அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்க தமிழக முதல் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் போதுமான அளவு உணவுகளை தயார் செய்ய சமுதாய கூடங்களை வலுப்படுத்துமாறும் ஆணை பிறப்பித்துள்ளார். இதனால் முதியோர், நோயுற்றோர், ஆதரவற்றோர் பயன்பெறுவர் என அந்த ஆணையில் குறிப்பிட்டுள்ளார்.