2 சமூக மாணவர்களிடையே மோதல்!,. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் கைது!..பண்ருட்டியில் பரபரப்பு..!

2 சமூக மாணவர்களிடையே மோதல்!,. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் கைது!..பண்ருட்டியில் பரபரப்பு..!



Clashes among students of the community arrested one person under Prevention of Violence Act

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள அக்கடவல்லி பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஏராளமானோர் திருத்துறையூர், புதுப்பேட்டை, பண்ருட்டி, கடலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இயங்கிவரும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று படித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று காலை பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்காக மாணவர்கள் அக்கடவல்லி பேருந்து நிலையத்தில், பேருந்துக்காக காத்திருந்தனர்.

அப்போது இருசமூகத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களிடையே ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் திடீரென ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் ஒரு தரப்பை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே காயமடைந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், 5 பேரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புதுப்பேட்டை காவல் நிலையத்தில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் உள்ளிட்ட காவல்துறையினர், இந்த மோதல் தொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மற்றொரு சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததுடன் ஒரு மாணவனை கைது செய்தனர்.