திருமணம் செய்து கொள்வதாக கூறி; பல பெண்களிடம் லட்சக்கணக்கில் ஏமாற்றிய வாலிபர் கைது..!

திருமணம் செய்து கொள்வதாக கூறி; பல பெண்களிடம் லட்சக்கணக்கில் ஏமாற்றிய வாலிபர் கைது..!Claiming to get married; The youth who cheated many women out of lakhs was arrested..

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை பேசி, பெண் டாக்டரிடம் 13 லட்ச ரூபாய் ஏமாற்றிய போலி டாக்டர் சென்னையில் கைது.

சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர், இணையதளம் மூலம் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து மாப்பிள்ளை தேடி வந்தார். சென்னை நாவலூரை சேர்ந்த கார்த்திக் ராஜ் என்ற தினேஷ் கார்த்திக் (28), பெண் டாக்டரின் திருமண தகவலை பார்த்து உள்ளார். உடனே, அந்தப் பெண்ணிடம் தன்னை மருத்துவர் என்று அறிமுகம் செய்து கொண்ட கார்த்திக் ராஜ், அந்த பெண்ணுடன் பழகியுள்ளார். மேலும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, அந்த பெண்ணிடம் இருந்து 12 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மற்றும் ஒரு ஐபோனும் வாங்கியுள்ளார். 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, அந்த பெண் மருத்துவர், கார்த்திக் ராஜை தொடர்பு கொண்டு, நேரில் சந்தித்து திருமணம் பற்றி பேச வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், கார்த்திக் ராஜ் பல காரணங்களை சொல்லி, நேரில் சந்திப்பதை தவிர்த்து வந்தார். இதனால், சந்தேகம் அடைந்த அந்த பெண், இதை பற்றி தனது உறவினர் ஒருவரிடம் கூறினார். அந்த உறவினர் உடனடியாக அடையாறு காவல் நிலையத்தில் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கார்த்திக் ராஜை தேடி வந்தனர்.

இநிலையில், காவல்துறையினரிடம் சிக்கிய கார்த்திக் ராஜிடம் விசாரணை செய்தனர். அதில், அவர் காதல் மன்னனாக வலம் வந்தது தெரியவந்தது. பி.காம். படித்துள்ள கார்த்திக் ராஜ், தன்னை மருத்துவர் என கூறி ஏமாற்றியுள்ளார். மேலும், திருமண தகவல் மையத்தில் வேறு ஒருவரின் புகைப்படத்தை பதிவு செய்து, இந்த பெண் மருத்துவரிடம் மட்டுமல்லாமல், மேலும் பல பெண்களிடம் பழகி, லட்சக்கணக்கில் பணம் பறித்து ஏமாற்றி யுள்ளார். அவரிடம் இருந்து 98 ஆயிரம் ரூபாய் பணம், ஐந்து செல்போன்கள், ஒரு பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கார்த்திக் ராஜை கைது செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.