ஒரு நொடில தப்பித்த உயிர்!! பார்க்கவே மனசு பதறுது!! பேருந்து சக்கரத்தில் சிக்காமல் தப்பித்த நபர்..! வைரல் வீடியோ..

ஒரு நொடில தப்பித்த உயிர்!! பார்க்கவே மனசு பதறுது!! பேருந்து சக்கரத்தில் சிக்காமல் தப்பித்த நபர்..! வைரல் வீடியோ..



Chithambaram bike accident and rider escaped

இருசக்கர வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட விபத்தில், பைக்கில் சென்ற நபர் பெரிய விபத்தில் இருந்து உயிர் தப்பிய வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

சிதம்பரம் அருகே இந்த விபத்து நடந்துள்ளது. சங்கர் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது தனது அருகே சென்ற மற்றொரு இருசக்கர வாகனத்தின்மீது மோதியுள்ளார். இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

அதேநேரம் சங்கருக்கு பின்னால் அரசு பேருந்து ஒன்று வேகமாக வந்தகொண்டிருந்தநிலையில், அப்பேருந்து சங்கரின் மீது ஏறாமல் நூலிழையில் தள்ளிச்சென்றது. ஆனால் சங்கர் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் பேருந்தின் அடியில் சிக்கியது.

அதிர்ஷ்டவசமாக சங்கர் மிகப்பெரிய விபத்தில் இருந்து உயிர் தப்பினார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது.