சென்னையில் இப்படியும் ஒரு கூட்டம் உள்ளதா! - சின்மயி பரபரப்பு பேச்சுchinmayi-about-chennai-boys-in-festival

பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் நடிகர் சரவணன் கல்லூரி காலத்தில் பேருந்தில் பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதை மிகவும் அசால்டாக வெளியில் கூறினார். இதனால் அவருக்கு எதிராக பாடகி சின்மயி போன்றோர் குரல் கொடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் இது தொடர்பாக சின்மயி வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பேசியுள்ள சின்மயி, சரவணன் செய்தது குற்றம். பெண்களை கற்பழித்தால் மட்டுமே குற்றம் என்று எண்ணுவது தவறு. பெண்களிடம் தவறாக நடந்துகொள்வதும் தான் குற்றம். 

chinmayi

சென்னையில் விழாக்காலங்களில் இதைப் போன்று பெண்களிடம் தவறான செயல்களில் ஈடுபடுவதை போட்டியாகவே நடத்துவதற்கென்று ஒரு கூட்டம் உள்ளது. கூட்டம் அதிகமாக உள்ள கோவில்கள், வணிக வளாகங்களில் யார் எத்தனை பெண்களின் மார்பகத்தினை பிடிப்பது என்று சில இளைஞர்கள் போட்டி நடத்துகின்றனர். 

இதெல்லாம் மண்ணிக்க முடியாத குற்றங்கள். இதைப் போன்ற குற்ற செயல்களை கண்டிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் இதைபோன்ற பாலியல் தொந்தரவுகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் ஆண்கள் இதனை வெளியில் சொல்வதில்லை என பேசியுள்ளார்.