திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றும் மலையில் 11 நாட்களாக பதுங்கியிருந்த சீன நபர்! கொரோனா அச்சம்! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம்

திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றும் மலையில் 11 நாட்களாக பதுங்கியிருந்த சீன நபர்! கொரோனா அச்சம்!

திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றும் மலையில் 11 நாட்களாக பதுங்கியிருந்த சீனாவை சேர்ந்த நபரை வனத்துறையினர் மீட்டு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றும் மலையில் பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். மகாதீபம் ஏற்றப்படும் நாட்கள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் மலை மீது மக்கள் ஏற வனத்துறை மூலம் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் மகாதீப மலையில் ஆள்நடமாட்டம் இருப்பதாக திருவண்ணாமலை மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் மலை மீது ஏறி வனத்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில் மலையில் உள்ள குகையில் ஒருவர் பதுங்கி இருந்தது தெரியவந்தது. 

பின்னர் வனத்துறையினர் அந்த நபரை மலையில் இருந்து மீட்டு கீழே இறக்கி வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவரது பெயர் யாங்யாஓர் (40) என்பதும், சீனாவில் இருந்து கடந்த 45 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்ததும் அவர் கடந்த 11 நாட்களாக மலையில் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது.

மார்ச், 25 ஆம் தேதி  ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் அதற்க்கு பயந்து, மலை மீதுள்ள குகையில் பதுங்கியிருந்துள்ளார். அவரை போலீசாரிடம், வனத்துறையினர் ஒப்படைத்தனர். அவரை, கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo