அடேய்.. அது ஜல்லிக்கட்டு காளைடா.. சிறுவர்களின் கியூட் ஜல்லிக்கட்டு வீடியோ வைரல்.!Children Make Funny Jallikattu Video Goes Viral

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது, தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக இருக்கும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். வாடிவாசல் வழியாக துள்ளிவரும் காளைகளை அடக்கி, காளையர்கள் தங்களின் வீரத்தை வெளிப்படுத்துவார்கள். 

நடப்பு வருடத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடி முடித்துவிட்ட நிலையில், பெரும்பாலான ஜல்லிகட்டு போட்டிகளும் நிறைவு பெற்றுவிட்டன. இந்நிலையில், வீட்டில் இருக்கும் 2 சிறுவர்கள் மற்றும் 1 சிறுமி, காளையை காளையர்கள் அடக்குவது போல செய்யும் அட்ராசிட்டி வீடியோ வெளியாகியுள்ளது. 

children

மரத்தில் கட்டப்பட்டு அமைதியாக நிற்கும் காளையின் மீது ஏறி விளையாடும் சிறார்கள், அதனை அடக்கவும் முயற்சி செய்கின்றனர். காளையும் சிறார்களுக்கு சிறிது ஒத்துழைத்து, தனது தலையை சாய்த்து கொடுத்து, பின்னர் இயல்பு நிலைக்கு வருகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Watch Video Click Here: https://www.facebook.com/100004911556094/videos/3109367735942940/