தாய்மாமனின் காரில் சென்ற பள்ளி மாணவிகள்! பிறகு நடந்த சோக சம்பவம்..!!

தாய்மாமனின் காரில் சென்ற பள்ளி மாணவிகள்! பிறகு நடந்த சோக சம்பவம்..!!


children-accident

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூர் கரிகாலன் நகரை சேர்ந்தவர் குமார். இவருக்கு  கனிஷ்கா (வயது16), அஸ்விதா (வயது14) என இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மகள்கள் இருவரும் சோழவரம் அடுத்துள்ள பஞ்சட்டி கிராமத்தில் உள்ள  தனியார் பள்ளியில்  11 ம் மற்றும் 9ம் வகுப்பு படித்து வந்தனர்.

இந்நிலையில், குமார் தனது இரண்டு மகள்களையும் தினமும் பள்ளிக்கு அழைத்துச் செல்வது வழக்கம். ஆனால், குமார் நேற்று வேலை காரணமாக வெளியில் சென்றுள்ளதால், குழந்தைகளின் மாமா நாகராஜ் அவர்கள் காரில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது , தேசிய நெருஞ்சாலையான கரோனடை அருகில் , கட்டுப்பாட்டை இழந்த கார் அதிவேகமாக சென்று மினி லாரி மேல் மோதியது. இதில் தாய்மாமன் நாகராஜ் மற்றும் கனிஷ்கா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Children accidentபின்னர், உயிருக்கு போராடி கொண்டிருந்த அஸ்விதாவை பொதுமக்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், அஸ்விதாவும் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சோழவரம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.