தமிழகம்

ஏற்கனவே 2 மனைவி.. 3-வதாக சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி போர்வெல் ஓட்டுநர் செய்த காரியம்.! அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் பூச்சநாய்க்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாறன் தம்பத

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் பூச்சநாய்க்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாறன் தம்பதியினர் தங்களது 15 வயது மகளை காணவில்லை என நம்பியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த நம்பியூர் காவல்துறையினர் சிறுமியை தேடி வந்த நிலையில்,அந்தச் சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த போர்வெல் வாகன ஓட்டுநரான ரவியுடன் குருமந்தூர் பகுதியில் இருப்பது தெரிய வந்துள்ளது.

தகவலறிந்த காவல்துறையினர் ஓட்டுநர் ரவியை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், இவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் ஆகியுள்ள நிலையில், முதல் மனைவியான வசந்தாவிடம் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து, தனியாக வந்து தனது இரண்டாவது மனைவியான பிரியாவிடம் வாழ்ந்து வந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து தனது வீட்டின் அருகே உள்ள தெருவில், சிறுமியை சந்தித்து வந்த நிலையில், அச்சிறுமியிடம் ஆசைவார்த்தைகள் கூறி மூன்றாவது திருமணம் செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஓட்டுநர் ரவியை போக்சோ சட்டத்தின் கீீீழ் கைது செய்து மகளிர் நீீீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

 


Advertisement