தமிழகம்

இளைஞரின் கண்மூடித்தனமான செயல்! தாயின் கண்முன்னே துடிதுடித்த சிறுமி!

Summary:

child died in accident

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள மல்லிகுட்டை கிராமத்தை சேர்ந்த அறிவரசன்-மணிமேகலை தம்பதியினருக்கு 5 வயதில் வர்ஷா ஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்தது. இந்தநிலையில் மணிமேகலையும், குழந்தை வர்ஷா ஸ்ரீயும் அருகிலுள்ள மளிகை கடைக்கு நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக இளைஞர் ஒருவர் வேகமாக இருசக்கர வாகனத்தை தாறுமாறாக ஓட்டிவந்து குழந்தை மற்றும் தாய் மீது மோதியுள்ளார்.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட குழந்தையை தாய் மணிமேகலை மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அந்த விபத்தில் தாய் மணிமேகலைக்கு சிறிது காயம் ஏற்பட்டது. இந்தநிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவாக உள்ள செந்தில் என்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

சாலையில் ஒரு சில இளைஞர்கள், வாகனங்களை தாறுமாறாக ஓட்டும்போது அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். தவறுதலாக வாகனம் ஓட்டியது அந்த இளைஞன். ஆனால் பரிதாபமாக தாயின் கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்த குழந்தையின் இறப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement