தமிழகம்

தூய்மை பணியாளர்களை அமரவைத்து பிரியாணி விருந்து வைத்த ஷேக்தாவூத் மரைக்காயர்..! பூரித்துப்போன தொழிலார்கள்.!

Summary:

Chicken biriyani treat for sanitary workers

மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கொரோனா தடுப்பு பணியில் போராடிவரும் தூய்மை பணியாளர்களுக்கு சிக்கன் பிரியாணி செய்து விருந்து வைத்துள்ளார் நாகூரை சேர்ந்த தனியார் பள்ளி உரிமையாளர் ஷேக்தாவூத் மரைக்காயர்.

துபாயில் வசித்துவரும் ஷேக்தாவூத் மரைக்காயர் அவர்கள், ஊரடங்கு அமல்படுத்தப்பட நாளில் இருந்து நாக்கை மாவட்டம் நாகூரை சுற்றியுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வது, நிவாரணம் வழங்கிவருவது போன்ற சமூக பணிகளில் ஈடுபட்டுவருகிறார். இந்நிலையில் உழைப்பாளர் தினமான நேற்று தூய்மை பணியாளர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக அவர்களுக்கு விருந்து ஏற்பட்டு செய்துள்ளார்.

துபாயில் இருந்துகொண்ட, இங்கிருக்கும் தனது நண்பர்கள் உதவியுடன் சுமார் 300 பேருக்கு சிக்கன் பிரியாணி ஏற்பாடுசெய்யப்பட்டு விருந்து வழங்கப்பட்டது. இந்த விருந்தில் கலந்துகொண்ட நாகை நகராட்சி ஆணையர் யேசுராஜ் அவர்கள் பிரியாணியை துப்புரவு பணியாளர்களுக்கு பரிமாற அனைவரும் மகிழ்ச்சி பொங்க உணவை உண்டு அங்கிருந்து சென்றனர்.


Advertisement