தமிழகம்

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் காலமானார்.!

Summary:

chennai/supreme-court-former-judge-a-r-lakshmanan-expired

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ. ஆர். லட்சுமணன் உடல் நலக்குறைவால் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் ஏ. ஆர். லட்சுமணன். இவர் சட்ட ஆணையத்தின் தலைவராகவும் முல்லைப்பெரியாறு ஆய்வுக் குழுவிலும் இடம் பெற்று இருந்தார். பொது இடத்தில் புகை பிடிக்க தடை விதித்து தீர்ப்பளித்தவர்.

78 வயதான ஏ.ஆர்.லட்சுமணன் உடல் நலக்குறைவால் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார். சமீபத்தில் தான் இவரது மனைவி உயிரிழந்த நிலையில் இவரின் உயிரிழப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


Advertisement