லெபனான் போலவே சென்னையிலும் ஏற்படுமா.! 6 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரும் அம்மோனியம் நைட்ரேட்.

லெபனான் போலவே சென்னையிலும் ஏற்படுமா.! 6 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரும் அம்மோனியம் நைட்ரேட்.


chennaiammonium-nitrate-is-kept-carefully-says-chennai-

பெய்ரூட் துறைமுகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக அம்மோனியம் நைட்ரேட் ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருந்ததால் அதிக வெப்பம் வெளியாகி வெடித்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் தற்போது சென்னையில் உள்ள துறைமுகத்தில் கடந்த ஐந்தரை ஆண்டுகளாக 740 மெட்ரிக் டன் எடை கொண்ட அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது கடந்த 2015 ஆம் ஆண்டு கரூர் அம்மன் கெமிக்கல் நிறுவனம் அனுமதியின்றி அம்மோனியம் நைட்ரேட்டை சென்னை துறைமுகத்தில் இறக்குமதி செய்ததால் சுங்க துறை அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து வைத்துள்ளனர்.

Ammoniyam nitrate

இதனால் நேற்று முன்தினம் பெய்ரூட்டில் நடந்தது போலவே சென்னையில் வெடிவிபத்து ஏற்பட்டு விடும் என மக்கள் அச்சத்தில் இருந்து வருகிறது. இதையடுத்து சென்னை மணலி துறைமுகத்திற்கு சொந்தமான வேதிப்பொருள் கிடங்கில் சுங்கத் துறை அதிகாரிகள், வேதிப்பொருள் துறை அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகள் என ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது அவர்கள் கூறுகையில் சென்னையில் மணலியில் உள்ள அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளதாகவும், மக்கள் குடியிருப்புக்கு வெகு தொலைவில் உள்ளதால் மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தற்போது நிலவி வரும் கொரோனா பாதிப்பு காரணமாக ஏலம் விடுவதில் சற்று தாமதம் ஏற்ப்பட்டுள்ளது. அதனால் இணையம் மூலம் ஏலம் விடுவதற்காக முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.