உறங்கிக்கொண்டிருந்த வயதான தம்பதி.. சத்தமே இல்லாமல் நடந்த கொள்ளை சம்பவம்.. சென்னையில் பகீர்..!

உறங்கிக்கொண்டிருந்த வயதான தம்பதி.. சத்தமே இல்லாமல் நடந்த கொள்ளை சம்பவம்.. சென்னையில் பகீர்..!


Chennai Velachery Aged Couple House Robbery Done by Thief Police Investigation

வயதான தம்பதிகள் அதிகாலையில் அயர்ந்து உறங்குவதை கண்காணித்து, பீரோவை உடைத்து 17 சவரன் நகை, ரூ.1 இலட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம நடந்துள்ளது.

சென்னையில் உள்ள வேளச்சேரி, வீனஸ் காலனி 2 ஆவது தெருவில் வசித்து வருபவர் சீனிவாசன் (வயது 64). இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். 

நேற்று இரவு நேரத்தில் தம்பதிகள் இருவரும் உறங்கிக்கொண்டு இருந்த நிலையில், குழாய் வழியாக வீட்டிற்குள் மர்ம நபர்கள் புகுந்துள்ளனர். 

இவர்கள், வீட்டில் இருந்த பீரோவை உடைத்து, 70 சவரன் தங்க நகை மற்றும் ரூ.1 இலட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். 

chennai

காலையில் எழுந்த தம்பதி பீரோ உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர், இதுகுறித்து வேளச்சேரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொள்ளையர்களுக்கு வலைவீசப்பட்டுள்ளது.