
17 வயது சிறுமியை சீரழித்து, வீடியோ எடுத்து மிரட்டிய பயங்கரம்.. கருக்கலைப்பு மாத்திரையால் சிக்கிய காமுகன்.!
மயக்க மருந்து கொடுத்து பள்ளி மாணவியை சீரழித்த இளைஞன், அவருக்கு கருவை கலைக்க மாத்திரை வாங்கி கொடுத்த போது பெற்றோருக்கு விஷயம் தெரியவந்து கைதாகி இருக்கிறார்.
சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த 11 ஆம் வகுப்பு பயிலும் சிறுமி, கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். சிறுமியிடம் பெற்றோர்கள் விசாரிக்கையில், அப்பகுதியை சேர்ந்த ராகவ ராஜா என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது அம்பலமானது.
சம்பவத்தன்று, சிறுமி குடிக்கும் குளிர்பானத்தில் மயக்க மருந்தை கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர், அதனை வீடியோ எடுத்து பலமுறை சிறுமியிடம் அத்துமீறி இருக்கிறார். இதனால் சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.
சிறுமி தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை ராகவ ராஜாவிடம் தெரிவிக்கவே, அவர் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி கொடுத்துள்ளார். கருக்கலைப்பு மாத்திரையை சாப்பிட்ட பின்னரே சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ராகவ ராஜாவை கைது செய்தனர்.
Advertisement
Advertisement