தமிழகம்

ஆபாச படங்களை சென்னையில் தான் அதிகம் பார்க்கின்றார்களா! டிஜிபி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.

Summary:

Chennai sexyual video

இன்று அதிகப்படியான இடங்களில் பாலியல் பலாத்காரம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட ஹைதராபாத்தில் பெண் மருத்துவருக்கு நிகழ்ந்த கொடுமையை யாராலும் மறக்க முடியாது. அதனால் அனைத்து மாவட்ட காவல் துறை அதிகாரிகளும் குற்றத்தை தடுக்க முன்னெச்சரிக்கை செயல்களை செய்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில் ஒரு சில பயன்னுள்ள தகவல்களையும், பெண்களின் பாதுகாப்புக்கு என்ன செய்யலாம் என்பதற்கான வழிமுறைகள் சிலவற்றையும் வெளியிட்டனர். அதுமட்டுமின்றி தற்போது தான் பெண்கள் தொடர்பான குற்றங்களை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் சமுதாயத்தில் எழுந்துள்ளது.

இதன் முதல் கட்டமாக ஆபாச படங்கள் பார்ப்பவர்களை பற்றிய தகவலை டிஜிபி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது சமீபத்தில் இந்திய உள்துறை அமைச்சகத்துக்கு அமெரிக்க உளவுத்துறை அமைப்பு அனுப்பிய தகவலில் குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பார்க்கும் இளைஞர்களில் இந்தியாவில்தான் அதிகம் என்று கூறியுள்ளார். 

அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தான் அதிகம் என்றும் ஏன் இன்னும் கூறப்போனால் தமிழகத்தில் சென்னையில் தான் அதிகம் என்றும் தகவலை வெளியிட்டுள்ளனர். அதன் படி யாரெல்லாம் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்கிறார்கள், அதிகம் வாட்ஸ் ஆப்பில் பரிமாறப்படும் வீடியோகள் போன்றவற்றை கண்டுப்பிடித்து அவர்களை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அப்படி கைது செய்யப்படும் நபருக்கு தகவல் தொழில்நுட்பத்தை தவறாக கையாளுதல் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்று டிஜிபி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 


Advertisement