இந்த 24 மாவட்டங்களில் இடி மின்னலுடன் நொறுக்கியெடுக்கப்போகும் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

இந்த 24 மாவட்டங்களில் இடி மின்னலுடன் நொறுக்கியெடுக்கப்போகும் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!


Chennai RMC Announce Rain Today Heavy

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "தமிழக பகுதிகள் மற்றும் வட இலங்கையை ஒட்டிய கடலோரப்பகுதிகளில் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக 2-ம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், சென்னை, ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

chennai

3-ஆம் தேதியை பொருத்தவரையில் தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுச்சேரி பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 22 - 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

chennai

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக 1-ஆம் தேதி முதல் 2-ஆம் தேதிவரையிலும் மன்னார் வளைகுடா, தமிழக மற்றும் வடக்கு இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் சூறாவளிகாற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்களை இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.