காலம்போன கடையில் கள்ளக்காதல் மோகம்.. வேலைக்காரியை வீட்டுக்காரியாக்கி நடந்த பயங்கரம்.. பரபரப்பு தகவல்.!CHENNAI REDHILLS ILLEGAL AFFAIR MURDER

மனைவியின் உடல்நலக்குறைவை கவனிக்க பணியமர்த்தப்பட்ட வேலைக்காரியுடன் வீட்டின் உரிமையாளர் வைத்துக்கொண்ட கள்ளக்காதல் வேலைக்காரியின் உயிர்பறித்த சோகத்தை நிகழ்த்தியுள்ளது.

சென்னையில் உள்ள செங்குன்றம், கிராண்ட்லைன் கரிகால சோழா நகரில் வசித்து வருபவர் நாதன் (வயது 65). இவர் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். இவரின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால், கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக ஆந்திர பிரதேசம் மாநிலம் தடா நகரை சேர்ந்த அற்புதம்மாள் (வயது 50) என்ற பெண்மணியை வீட்டு வேலைக்கு பணியமர்த்தியுள்ளார். 

அற்புதம்மாள் இரண்டு வருடமாக வேலைபார்த்து வந்த நிலையில், கடந்த 26 ஆம் தேதி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து செங்குன்றம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அதிகாரிகள் அற்புதம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

chennai

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனை முடிவில் அற்புதம்மாள் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளது உறுதியாகவே., நடந்த விசாரணையில் கள்ளக்காதல் கொலை என்பது உறுதியானது. நாதனின் மனைவி படுத்த படுக்கையாகிவிட்ட நிலையில், வேலைக்கு அமர்த்திய பெண்ணை நாதன் கள்ளக்காதலி ஆக்கியுள்ளார். 

இருவருக்குள்ளும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், சம்பவத்தன்று ஏற்பட்ட சண்டையில் ஆத்திரமடைந்த நாதன் கள்ளக்காதலி அற்புதம்மாளை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளார். இதனையடுத்து, உண்மையை கண்டறிந்த காவல் துறையினர் நாதனின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.