தமிழகம்

அப்பா..! அப்பா..! அப்பாவை வை தொட விடுங்க.! கதறிய இன்ஸ்பெக்டரின் குழந்தைகள்..! ஆம்புலன்சை துரத்திச் சென்ற மனைவி..! கண்கலங்க வைத்த சம்பவம்.!

Summary:

Chennai police inspector died due to corono

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த காவல் ஆய்வாளர் பாலமுரளியின் உடலை தொடவேண்டும் என அவரது மகளும், கணவனை ஏற்றிச்சென்ற வாகனத்தின் பின்னாலே ஓடிய அவரது மனைவியின் செயலும் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துவருகிறது. இந்நிலையில் சென்னை மாம்பலம் காவல்  நிலையத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பாலமுரளி அவர்கள் கொரோனா ஊரடங்கு, தடுப்பு பணிகளில் ஈடுபட்டபோது கொரோனா பாதித்து சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பாலமுரளி சிகிச்சை பலனின்றி கடந்த 17ம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனை அடுத்து பாலமுரளியின் உடலை சுகாதாரத்துறை அதிகாரிகள் பாதுகாப்புடன் மயானத்திற்கு அமரர் ஊர்தியில் உடலை கொண்டு சென்றனர்.

அப்போது மருத்துவமனை வளாகத்தில் பாலமுரளியின் மனைவி கவிதா, மகள் ஹர்ஷவர்தனி, மகன் நிஷாந்த் ஆகியோர் பாலமுரளியின் உடலை தொட வேண்டும் எனவும், கடைசியாக ஒருமுறை அவரது முகத்தை பார்க்கவேண்டும் எனவும் கதறி அழுதனர்.

ஆனால் பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் அவர்களை அருகில் அனுமதிக்கவில்லை. இருப்பினும் பாதுகாப்பை மீறி அவரது மகள் தந்தையின் உடலை தொடவேண்டும், கடைசியாக அவரது முகத்தை பார்க்கவேண்டும் என கூறி செல்ல முயன்றார். ஆனால் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் உடல் அமரர் ஊர்தியில் ஏற்றப்பட்டு அடக்கம் செய்ய கொண்டு சென்றபோது பாலமுரளியின் மனைவி கவிதா அமரர் ஊர்தியை பிடித்தபடி சிறிது தூரம் ஓடினார். இதை பார்த்த மருத்துவமனையில் இருந்த பலரும் கண்கலங்கினர்.


Advertisement