#Breaking: ஆஸ்கரில் மிகப்பெரிய அதிர்ச்சி.. இந்திய படங்கள் தேர்வு இல்லை.. ஷாக் தகவல்.!
காதல் கல்யாணம் 4 மாதத்தில் விரக்தி.. குடிகார கணவனால் தூக்கில் தொங்கிய புதுமணப்பெண்.!
பிறந்தநாளன்று காதல் கணவர் வெளியே அழைத்து செல்லாமல் போதையில் வந்ததால், மனமுடைந்த மனனவி தூக்கில் தொங்கி உயிரிழந்தார்.
சென்னையில் உள்ள பல்லாவரம், பொழிச்சலூர் வேதாச்சலம் நகரில் வசித்து வருபவர் சாமுவேல் (வயது 21). இவர் பெயிண்டராக இருந்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்த பெண்மணி தனுஜா (வயது 20).
இவர்கள் இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாக காதலித்து திருமணம் செய்துகொண்டனர். நேற்று தனுஜாவுக்கு பிறந்தநாள் வந்துள்ளது. பிறந்தநாளன்று தன்னை வெளியே அழைத்து செல்லுமாறு காதல் கணவரிடம் தனுஜா தெரிவித்துள்ளார்.
மாலையில் வெளியே அழைத்து செல்கிறேன் என்று வேலைக்கு சென்ற சாமுவேல், இரவில் மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் மனமுடைந்துபோன தனுஜா, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த சங்கர் நகர் காவல் துறையினர், தனுஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.