பணம் சம்பாதிக்க, சொந்த வீட்டு பெண்களை.., இளைஞர் பகீர் செயல்.. பேரதிர்ச்சி சம்பவம்.! சென்னையில் துயரம்.!!

பணம் சம்பாதிக்க, சொந்த வீட்டு பெண்களை.., இளைஞர் பகீர் செயல்.. பேரதிர்ச்சி சம்பவம்.! சென்னையில் துயரம்.!!


chennai-ottery-man-capture-family-girl-glamour-video-sh

வீட்டில் இருக்கும் உறவினரான வெவ்வேறு வயது பெண்களை இளைஞர் ஆபாசமாக படம் எடுத்து இணையத்தில் பரப்பிவிட்ட பகீர் சம்பவம் நடந்துள்ளது.

சென்னையில் உள்ள ஓட்டேரியில் வசித்து வருபவர் கிருஷ்ணா (வயது 21). இவர் பி.காம் பட்டதாரி ஆவார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கிருஷ்ணாவின் மீது அவரின் வீட்டில் வசித்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 55 வயது, 40 வயது மற்றும் 27 வயது ஆகிய 3 இளம்பெண்கள் புகார் அளித்துள்ளனர். 

இந்த புகாரில், "எங்களின் உறவினர் கிருஷ்ணா என்பவர், நாங்கள் வீட்டில் துணி துவைக்கும் போதும், ஆடை விலகும் போதும் என எங்களுக்கே தெரியாமல் எங்களை ஆபாசமாக செல்போனில் படம் பிடித்து இருக்கிறார். இதனை சமூக வலைத்தளங்களிலும் பல நாட்களாக பதிவு செய்துள்ளார்.

chennai

இதுகுறித்த விஷயம் எங்களுக்கு இப்போதுதான் தெரியவந்தது. அவரின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்களின் வீடியோக்கள் நீக்கம் செய்யப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற ஓட்டேரி காவல் துறையினர் கிருஷ்ணாவிடம் நடத்திய விசாரணையில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு வீட்டில் இருக்கும் உறவுக்கார பெண்களை படம்பிடித்து வீடியோ பதிவேற்றிய பகீர் செயல் அம்பலமானது. அவரை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.