தமிழகம்

ஏரியாவுல யார் பெரிய தாதா?.. 21 வயது வாலிபர் கொலை முயற்சி.. 8 வயது சிறுவன் உட்பட 5 சில்வண்டுகள் கைது.!

Summary:

ஏரியாவுல யார் பெரிய தாதா?.. 21 வயது வாலிபர் கொலை முயற்சி.. 8 வயது சிறுவன் உட்பட 5 சில்வண்டுகள் கைது.!

21 வயது வாலிபரை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட 5 பேர் கும்பல் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

சென்னையில் உள்ள நன்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு பிரியன் (வயது 21). இவர் கோவிலம்பாக்கம், சத்யா நகர் தெருவில் பிளைவுட் கடையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் விஷ்ணு பிரியன் இரவுநேர பணியாற்றி வந்துள்ளார். 

அப்போது, அங்கு வந்த 5 பேர் கும்பல், விஷ்ணுவை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்து தப்பி சென்றுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த விஷ்ணு பிரியனை மீட்டவர்கள், சிகிச்சைக்காக அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதி செய்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பள்ளிக்கரணை காவல் துறையினர், கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த சோலை ராஜா, சந்தோஷ் குமார், சக்திவேல், மணிமாறன் மற்றும் 8 வயது சிறுவன் என 5 பேரை அதிரடியாக கைது செய்தனர். 

இவர்களிடம் நடந்த விசாரணையில் ஏரியாவில் யார் செல்வாக்கு வாய்ந்தவர்கள் என்ற பிரச்சனை மோதலில், விஷ்ணுவை கொலை செய்ய முயன்றதும் அம்பலமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement