வாட்ஸப்பில் தொடங்கி நேரில் அதிகரித்த டார்ச்சர்.. காமனாக சுற்றிய வாத்தியால் கண்ணீர் விட்ட மாணவிகள்.. பதைபதைப்பு தகவல்.!

வாட்ஸப்பில் தொடங்கி நேரில் அதிகரித்த டார்ச்சர்.. காமனாக சுற்றிய வாத்தியால் கண்ணீர் விட்ட மாணவிகள்.. பதைபதைப்பு தகவல்.!


chennai-mogappair-girls-govt-school-teacher-sridhar-ram

முகப்பேர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் வாட்ஸப்பில் ஆபாச சேட்டிங் செய்ய தொடங்கி பின்னாட்களில் நேரடி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சென்னையில் உள்ள அண்ணா நகர் மேற்கு தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர் ராமசாமி (வயது 45). இவர் முகப்பேர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11 & 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு வேதியியல் பாடம் எடுத்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடந்துள்ளது. 

அப்போது, ஆசிரியர் ஸ்ரீதர் ராமசாமி மாணவிகளின் எண்களை சேமித்து வைத்துள்ளார். இந்நிலையில், மாணவிகளின் எண்ணுக்கு ஆசிரியர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். மாணவிகளிடம் அவ்வப்போது படிப்பு விஷயமாக பேசவேண்டும் என்று கூறி பேசி வந்த செயலும் நடந்துள்ளது. 

chennai

ஊரடங்கு முடிந்து நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில், ஸ்ரீதர் மாணவிகளிடம் அத்துமீறுவது மற்றும் சீண்டலில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரியவருகிறது. சில மாணவிகள் பயத்தால் ஸ்ரீதரின் செயல்களை வெளியே சொல்ல இயலாமல் தவித்துள்ளனர். தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், குழந்தைகள் நலத்துறையினருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தகவலின் பேரில் விசாரணை நடத்தி உண்மையை அறிந்த அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் போக்ஸோ உட்பட பல பிரிவுகளின் கீழ் ஸ்ரீதரின் மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிகளிடம் ஆசிரியர் பேசும் ஆடியோ பதிவும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.