கொரோனாவிற்கு மருந்து தயாரிக்கும் முயற்சியில் உயிரை பறிகொடுத்த மேலாளர்! சென்னையில் அரங்கேறிய சோகம்

கொரோனாவிற்கு மருந்து தயாரிக்கும் முயற்சியில் உயிரை பறிகொடுத்த மேலாளர்! சென்னையில் அரங்கேறிய சோகம்


chennai medical labarotory manager dead for corono medicine test

கொரோனோவிற்கான மருந்து தயாரிப்பின் போது சோடியம் நைட்ரேட் கரைசலை குடித்த சென்னையை சேர்ந்த சிவநேசன் என்பவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு எதிராக மருந்தினை கண்டுபிடிக்க பல்வேறு சர்வதேச நாடுகள் போராடி வருகின்றன. இதில் இந்தியாவை சேர்ந்த சுஜாதா பயோ டெக் என்ற நிறுவனத்தின் மேலாளர் சிவநேசன் மற்றும் உரிமையாளர் டாக்டர் ராஜ்குமார் இருவரும் சென்னையில் கொரோனோவிற்கான மருந்தினை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

corono medicine research

சிவநேசன் உத்திரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் அந்த நிறுவனத்தின் சளி மருந்து உள்ளிட்ட  மருந்துகள் தயாரிப்பு பிரிவில் மேலாளராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் சென்னைக்கு வந்த அவர் ஊரடங்கள் மீண்டும் பணிக்கு திரும்ப முடியவில்லை.

இதனை தொடர்ந்து சென்னை தியாகராய நகரில் இருக்கும் அந்நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் ராஜ்குமார் வீட்டில் இருவரும் சேர்ந்து கொரோனோவிற்கான மருந்தினை தயாரிக்கும் முயற்சியில் இணைந்து ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் சோடியம் நைட்ரேட் எனும் கரைசலை தயாரித்துள்ளனர்.

சோதனைக்காக இருவருமே அந்த கரைசலை பருகியுள்ளனர். இதில் சிவநேசன் சற்று அதிகமாகவே பருகியுள்ளதாக தெரிகிறது. எனவே அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதன் பின் உடனடியாக சிவநேசனை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.