தமிழகம்

யாருகிட்ட.? மவனே.. உன் யூனிஃபார்ம்ம கழட்டிடுவேன்.. ஜாக்கிரதை.. போலீசாரிடம் எகிறிய பெண்.. வைரலாகும் வீடியோ.!

Summary:

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருவதை அடுத்து கடந்த இரண்டு வாரங்களாக

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருவதை அடுத்து கடந்த இரண்டு வாரங்களாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. முழு ஊரடங்கின் கடைசி நாளான இன்று சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 

சென்னை சேத்துப்பட்டு பகுதியில் போக்குவரத்து காவலர்கள் இன்று வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்த போது, காரில் வந்த இரண்டு பெண்களை போலீஸார் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். அதில் ஒரு பெண் காவல் துறையினர் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்காமல் காவலர்களை கடுமையாக திட்டியுள்ளார். 

இந்த சம்பவத்தை போக்குவரத்து காவலர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். அதில் அந்த பெண் என்ன பார்த்து ஏய்-ன்னு சொல்றியா.?இப்ப காட்டடா... மவனே உன் யூனிபார்ம்ம கழட்டிடுவேன் ஜாக்கிரதை. என் காரா ஏன் நிறுத்துற.. ஏய் எல்லா காரையும் நிப்பாட்டுன்னு. காவலர்களை கடுமையாக பேசிய வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 


Advertisement