பிறந்த நாள் கேக்கோடு காத்திருந்த காதலி..! காதலன் கேக் வெட்ட வராததால் தூக்கிட்டு தற்கொலை..?

பிறந்த நாள் கேக்கோடு காத்திருந்த காதலி..! காதலன் கேக் வெட்ட வராததால் தூக்கிட்டு தற்கொலை..?


Chennai lady police commit suicide

காதலனின் பிறந்தநாளுக்கு ஆசையாக தான் வாங்கிச்சென்ற கேக்கை காதலன் வெட்ட வராததால் பெண் காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

சென்னை அயனவரத்தை சேர்ந்தவர் பெண் காவலர் சரண்யா. சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய இருப்புப்பாதை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் சரண்யா, நேற்று காலை கொரோனா தடுப்புப் பணி முடித்துவிட்டு மாலையில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டிற்கு சென்ற சரண்யா சிறிது நேரத்தில் வீட்டின் அறையில் மாட்டப்பட்டிருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சரண்யா தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட தகவலை சரண்யாவின் தோழி ராஜேஸ்வரி என்பவர் காவல்துறையினருக்கு போன் செய்து கூறியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இதுகுறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சரண்யா ஏழுமலை என்ற காவலரை காதலித்துவந்ததாகவும், அவருக்கு பிறந்தநாள் என்பதால் அவருக்காக சரண்யா பிறந்தநாள் கேக் வாங்கி சென்றதாகவும் கூறப்படுகிறது.

நீண்ட நேரம் காத்திருந்தும் காதலன் கேக் வெட்ட வராததால் அவருக்கு போன் செய்தபோது இருவருக்கும் தொலைபேசியிலையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இந்த மன உளைச்சலில்தான் சரண்யா தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.