கஞ்சா விற்பனை முன்விரோதத்தில் இளைஞர் கொடூர கொலை: மிளகாய்பொடி தூவி நடந்த பயங்கரம்.!Chennai Kolathur Man Killed 

 

சென்னையில் உள்ள கொளத்தூர் கோகுல் இரண்டாவது தெரு பகுதியில் வசித்து வருபவர் அஜிகல்லா (வயது 30). ஆட்டோ ஓட்டுநராக பணியாற்ற வருகிறார். திருமணம் முடிந்து மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இவர் அப்பகுதியில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை விற்பனை செய்து வந்ததாக தெரிய வருகிறது. 

இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவில் தனது உறவினர் வீட்டுக்கு அருகில் நின்று கொண்டிருந்த அஜிகல்லாவை, அங்கு வந்த நான்கு பேர் கும்பல் மிளகாய் பொடி தூவி கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டி சாய்த்து தப்பி சென்றது. இந்த சம்பவத்தில் உடலில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விசாரணையில் அருண் (வயது 35), சத்தியமூர்த்தி (வயது 20), சூர்யா (வயது 19), ஒரு சிறுவன் உட்பட நான்கு பேர் அஜிகல்லாவை கொலை செய்ததாக உறுதி செய்யப்பட்ட நிலையில், இவர்கள் அனைவரும் ஓட்டேரி காவல் நிலையத்தில் சரணடைந்தனர். 

அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கஞ்சா விற்பனை செய்யும் தகராறு காரணமாக அஜிகல்லா அருணை தாக்கியிருக்கிறார். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் தனது கூட்டாளிகள் நான்கு பேருடன் சேர்ந்து அருண் திட்டமிட்டு அபிகல்லாவை கொலை செய்தது தெரியவந்தது.