31 ஆம் தேதி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

31 ஆம் தேதி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!


Chennai IMD Announce Rain in Tamilnadu

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தென்தமிழக பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 27 ஆம் தேதியான இன்று மற்றும் 28 ஆம் தேதியான நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிதமான மழை பெய்யலாம். 

chennai

29 ஆம் தேதியை பொருத்தவரையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 30 ஆம் தேதி மற்றும் 31 ஆம் தேதியை பொறுத்தவரையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். 

chennai

தலைநகர் சென்னையை பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் பதிவாகலாம். மீனவர்களுக்காக எச்சரிக்கை எதுவும் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.