இருமலுக்காக ஊசி போட்ட இளம்பெண் அதிர்ச்சி மரணம்!! பதறவைக்கும் சென்னை சம்பவம்.

இருமலுக்காக ஊசி போட்ட இளம்பெண் அதிர்ச்சி மரணம்!! பதறவைக்கும் சென்னை சம்பவம்.


chennai-girl-died-for-wrong-injection

சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவரின் மகள் நித்யா(21). கல்லூரி முடித்துவிட்டு வேலைதேடி வந்த நித்யா கடந்த சில நாட்களாக இருமல் மற்றும் வாந்தியால் அவதிப்படுவந்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் அருகில் இருந்த கிளீனிக் ஒன்றிற்கு நித்யாவை அழைத்து சென்றுள்ளனர்.

நித்யாவை சோதித்த பெண் மருத்துவர் அவருக்கு ஊசி போட்டுள்ளார். ஊசி போட்ட சிறிது நேரத்தில் நித்தியாவிற்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டு ஆபத்தான நிலைக்கு சென்றுள்ளார். இதனால் பதறிப்போன பெற்றோர் மீண்டும் அதே பெண் மருத்துவரிடம் சென்ற நிலையில் அவர் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறியுள்ளார்.

Crime

மகளை தூக்கிக்கொண்டு க்ரோம்படையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் சென்றுள்ளன்னர். அங்கு, நித்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து அரைமணி நேரம் ஆகிவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு கதறி துடித்த பெற்றோர் தங்கள் பெண்ணிற்கு தவறான ஊசி போட்ட பெண் மருத்துவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதனை அடுத்து நடந்த முதற்கட்ட விசாரணையில் பெண்ணிற்கு தவறாக நரம்பு ஊசி போட்டதே காரணம் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.