தமிழகம்

சென்னையில் கொரோனா நோயாளி கொரோனா வார்ட்டிலையே தூக்கிட்டு தற்கொலை..! அதிர்ச்சி தகவல்..!

Summary:

Chennai corono patient commit suicide in corono ward

சென்னையில் கொரோனா வார்டில் சிகிச்சைபெற்றுவந்த 50 வயது நபர் ஒருவர் கொரோனா வார்ட்டிலையே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை உட்பட சென்னையின் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றுவர்க்கின்றனர்.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த 50 வயது கொரோனா நோயாளி ஒருவர் ஸ்டான்லி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தநிலையில் யாருக்கும் தெரியாமல், கொரோனா வார்ட்டிலையே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement