மாடிப்படியில் கால் இடறி விழுந்த எலக்ட்ரீசியன் பரிதாப பலி.. வேலையிடத்தில் நடந்த சோகம்.!Chennai Ayanavaram Electrician Died Slipped form Steps

சென்னையில் உள்ள அயனாவரம், மேட்டுத்தெருவில் வசித்து வருபவர் கிருஷ்னகுமார் (வயது 24). இவர் எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினத்தில் பெரியமேடு, இராஜா முத்தையா சாலையில் செயல்பட்டு வரும் தங்கும் விடுதியின் மொட்டைமாடியில் வேலை பார்த்துள்ளார். 

chennai

அப்போது, எதிர்பாராத விதமாக கால் இடறி கிருஷ்ணகுமார் மாடிப்படியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இந்த சம்பவத்தில், கிருஷ்ண குமார் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக பெரியமேடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.