2 சிறுமிகள், 5 இளைஞர்கள்.. லாட்ஜில் 2 நாட்களாக நடந்த கொடூரம்.. டிக் டாக் சாவகாசம் இறுதியில் சோகம்.!

2 சிறுமிகள், 5 இளைஞர்கள்.. லாட்ஜில் 2 நாட்களாக நடந்த கொடூரம்.. டிக் டாக் சாவகாசம் இறுதியில் சோகம்.!


Chennai Anakaputhur Police Rescue 2 Minor Girl in Lodge 5 Youngster Arrested

நான் தான் படிக்கவில்லை, என் பிள்ளையாவது படித்து நான்கு விஷயத்தை கண்டுகொண்டு வாழ்க்கையில் நன்றாக இருக்க வேண்டும் என எண்ணி பட்டினி கிடந்தாவது பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் கேட்டதை வாங்கிக்கொடுத்து, 3 வேளை உணவளித்து கவனித்து வருகிறார்கள். காலத்தின் மாற்றம், சமூக சீர்கேடு, பருவ வயது என பலவகை பிரச்சனைக்கு நடுவே சிக்கியுள்ள இன்றைய இளம் தலைமுறையை சீரழிக்கும் கருவியாக அமைந்துள்ள செல்போனால் அனகாபுத்தூர் சிறுமி சந்தித்துள்ள பிரச்சனை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சம்பவ நாளில் வீட்டில் இருந்து 2 மாணவிகள் காணாமல் போன நிலையில், இந்த விஷயம் தொடர்பாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ளவே, மாணவிகள் இருவரும் சென்ட்ரல் அருகேயுள்ள பெரியமேடு பகுதியில் லாட்ஜில் தங்கி இருப்பது உறுதியானது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் 2 மாணவிகளை மீட்டு, அவர்களுடன் தங்கியிருந்த 5 வாலிபர்களை கைது செய்தனர். 

இவர்கள் அனைவரின் மீதும் போக்ஸோ பிரிவுகளின் கீழ் கைது செய்த காவல் துறையினர், 4 பேரை சிறையில் அடைத்தனர். மேலும், ஒருவன் 17 வயது சிறுவன் என்பதால், அவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இந்த தகவலை அறிந்த குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். விசாரணையில், காவல் துறையினரையும், பெற்றோர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவலும் வெளியானது. 

chennai

சென்னையில் உள்ள பல்லாவரம், அனகாபுத்தூர் பகுதியில் பதினோராம் வகுப்பு பயின்று வரும் 5 மாணவிகள் தோழிகளாக இருந்து வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் டிக் டாக் ரசிகையாக இருந்து வந்த நிலையில், தினமும் ஷேர்ஷாட் மூலமாக டிக் டாக் போல பல விடீயோக்களை பதிவு செய்து வந்துள்ளனர். இவர்களின் ஆடல், பாடலுக்கு பலரும் லைக்குகளை வாரி வழங்கிய நிலையில், உற்சாகமான மாணவி தொடர்ந்து விடியோவை ஆர்வத்துடன் பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். 

உண்மையில் தங்களுக்கு லைக் செய்து வரவேற்பு தெரிவிப்பவர்களின் பின்னணி தெரியாமல், டிக்-டாக் மூலமாக திருவெற்றியூர் பகுதியை சார்ந்த சுரேன் என்ற அப்புவிடம் (வயது 23) சிறுமிகள் பழகியுள்ளனர். மாணவிகளின் விடியோவுக்கு பெரும் வரவேற்பு தெரிவித்த சுரேஷ், எண்ணூர் பக்கம் வாருங்கள். இன்னும் பல விடியோவை பதிவு செய்யலாம் என்று அளந்து விட்டு இருக்கிறார். 

மாணவிகள் 5 பேரும் எண்ணூருக்கு சென்ற நிலையில், அப்புவுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது, மாணவியின் செல்போனை திருடி வைத்துக்கொண்ட அப்பு, எதுவும் தெரியாதது போல அவர்களை அனுப்பி வைத்துள்ளான். பின்னர், அனைவரும் வீட்டிற்கு சென்ற நிலையில், மாலையில் செல்போனில் தொடர்பு கொண்ட அப்பு, நல்லவன்போல செல்போனை விட்டு சென்றுள்ளீர்கள் என்று கூறியுள்ளார். 

chennai

செல்போன் கிடைத்த மகிழ்ச்சிக்கு சென்ற மாணவிகள், தொலைந்துவிட்டதாக நினைத்தோம் என்று தெரிவித்த நிலையில், யாரேனும் ஒருவர் நேரில் வந்து போனை வாங்கி செல்லுங்கள் என்று அப்பு கூறியுள்ளார். மாணவி ஒருவர், தன்னுடன் மற்றொரு மாணவியை துணைக்கு அழைத்துக்கொண்டு சென்ட்ரல் இரயில் நிலையம் வந்துள்ளனர். செல்போனை கொடுத்த அப்பு, இரவு சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என அழைத்துள்ளார். மாணவிகளும் நம்பி சென்ற நிலையில், உயர்தர உணவகத்திற்கு அழைத்து சென்று விதவிதமான உணவுகளை வாங்கி கொடுத்து இருக்கிறார். 

பின்னர், நேரம் போவதே தெரியாத அளவு உணவகத்தில் பொழுதை கழிக்கவைத்து, தனது நண்பர்களையும் அப்பு வரவழைத்து, ஜெரால்டு (வயது 18), சஞ்சய் (வயது 19), வினித் (வயது 20), 17 வயது சிறுவன் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இவர்களும் இரவு விருந்தில் கலந்துகொண்ட நிலையில், நள்ளிரவு நேரம் ஆகிவிட்டதால், பக்கத்தில் உள்ள லாட்ஜுக்கு சென்று தங்கிவிட்டு காலையில் செல்லலாம் என்று கூறியுள்ளனர். தயக்கத்துடன் விடுதியில் தங்க ஒப்புக்கொண்ட 2 மாணவிகளுக்கு ஆளுக்கு ஒரு அறை என எடுத்து, இருவரும் அவர்களுடன் தங்கி இருந்துள்ளனர்.

மறுநாள் காலை விடிந்த நிலையில், மறுநாளும் தங்க வைத்துள்ளனர். இதற்குள் காவல் துறையினரிடம் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடந்து விடுதியில் சிறுமிகளை மீட்டுள்ளனர். 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். டிக் டாக் செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்டு இருந்தாலும், மூன்றாம் தர செயலிகளை வைத்து அதனை பதிவிறக்கம் செய்வதாகவும் கூர்பாடுகிறது. இந்த விவகாரத்தில் மாணவிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டார்களா? என பெற்றோர்கள் மகள்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.