தாலியேறும் நேரத்தில் காதலியுடன் கம்பிநீட்டிய மணமகன்... மேடையில் கலங்கிநின்ற மணப்பெண்.. செங்கல்பட்டில் சோகம்.!

தாலியேறும் நேரத்தில் காதலியுடன் கம்பிநீட்டிய மணமகன்... மேடையில் கலங்கிநின்ற மணப்பெண்.. செங்கல்பட்டில் சோகம்.!


Chengalpattu Thiruporur Man Escape with Love Girl Before Marriage awaiting Hall

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர், மேட்டுபாளையத்தை சேர்ந்தவர் உமாபதி. இவரின் மனைவி மகாலட்சுமி. இவர்களின் மகன் சதீஷ் குமார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டை சேர்ந்த பெண்ணுடன் சதீஷ் குமாருக்கு நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

மாப்பிள்ளை சதீஷ் நிச்சியமாக நாளில் இருந்து பெண்ணிடம் சரிவர பேசுவது இல்லை. மணப்பெண் போனில் தொடர்பு கொண்டாலும் தவிர்த்து வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பெண் வீட்டார் மணமகன் வீட்டாரிடம் தகவலை தெரிவித்தும் பலனில்லை. அவர்கள் பல்வேறு காரணங்கள் கூறி சமாளித்துள்ளனர். 

இந்நிலையில், பேசிமுடித்தபடி இருதரப்பு உறவினர்களும் அழைப்பிதழை விநியோகித்து, திருப்போரூர் கோட்டைமேடு தனியார் மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி ஏற்பாடுகள் நடந்துள்ளது. முதல்நாள் வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்திய உறவினர்கள், மறுநாள் காலையில் திருமணத்திற்காக காத்திருந்துள்ளனர்.

Chengalpattu

மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் அடுத்தடுத்து நடக்க, மணமகனை அய்யர் கேட்கையில் அவரை காணவில்லை. ஒருகட்டத்தில் பெண்ணுக்கு உண்மை தெரியவர, மணப்பெண் கண்கலங்கி நின்றுள்ளார். இதனால் மண்டபத்திற்குள் பெண்வீடு - மாப்பிள்ளை வீட்டார் என சலசலப்பு அதிகமாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருதரப்பையும் சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர். மேலும், பெண் வீட்டார் சார்பில் திருப்போரூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் நடந்த விசாரணையில் மாப்பிள்ளை காதலியுடன் கம்பிநீட்டிய விவகாரமும் அம்பலமானது. 

மேலும், மணமகனின் காதல் விவகாரம் தெரிந்தும் அவரின் பெற்றோர் உண்மையை மறைத்து செயல்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாது பெண் வீட்டார் சார்பில் 40 சவரன் நகைகள், பீரோ, ஏ.சி, ரூ.1.5 இலட்சம் மதிப்பில் இருசக்கர வாகனம் ஆகியற்றையும் வரதட்சணையாக கேட்டு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.