அரசு பள்ளியில் அரையாண்டு விடுமுறையில் மாற்றம்: பெற்றோர்கள் மகிழ்ச்சி!. மாணவர்கள் வருத்தம்!.

அரசு பள்ளியில் அரையாண்டு விடுமுறையில் மாற்றம்: பெற்றோர்கள் மகிழ்ச்சி!. மாணவர்கள் வருத்தம்!.


change in school leave

பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கடந்த 13 ஆம் தேதி முதல் அரையாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகள் நாளை 23 ஆம் தேதி அன்று முடிவடைகிறது.  

அதன்பின் வரும் 23 ஆம் தேதி முதல் ஜன. 1ம் தேதி வரை அனைத்து பள்ளி மாணவ மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரையாண்டு தேர்வு விடுமுறையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்பு நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 23ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை நாளில் சிறப்பு வகுப்பு நடைபெறவுள்ளது. சிறப்பு வகுப்புகள் நடத்தும் விவரங்களை மாணவ, மாணவியர்களின் பெற்றோர்களுக்கு தெரிவிக்கவும் கல்வித்துறை  சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

school

பொதுவாகவே விடுமுறை நாளில் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவது வழக்கம். ஆனல் அரசு பள்ளிகளுக்கும் சிறப்பு வகுப்பதுகளை நடத்துவது பெற்றோர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இந்த வருடம் 10,+1.+2 மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை இல்லை என்பது அரசு பள்ளி மாணவர்களுக்கு வருத்தம் அளிக்க கூடிய அறிவிப்பாக தான் இருக்கும்.