தமிழகம்

மகிழ்ச்சி செய்தி#: தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்

Summary:

Chances for rain at tamilnadu

கோடை வெயில் சுட்டெறிக்க துவங்கியுள்ள இந்த சமயத்தில் வெப்ப சலனம் காரணமாக ஒருசில மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்ப சலனம் காரணமாக சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்தது. ஆனால் மீண்டும் கோடை வெயில் சுட்டெறிக்க துவங்கியது.

மேலும் ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள்ளே மக்கள் முடங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் மிகுந்த புழுக்கம் ஏற்பட்டு இரவில் கூட நிம்மதியாக தூங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் திருப்பூர், நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, உள்ளிட்ட மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


Advertisement