தமிழகம்

#BREAKING எடப்பாடி பழனிசாமி மீது பாய்ந்தது வழக்கு.! என்ன காரணம்.?

Summary:

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் அறிக்கையில் கொடுத்திருந்த வாக்குறுதிகளான நீட் தேர்வு ரத

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் அறிக்கையில் கொடுத்திருந்த வாக்குறுதிகளான நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் விலை குறைப்பு, பெண்களுக்கு மாத உரிமை தொகை போன்றவற்றை நிறைவேற்றவில்லை உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து எதிர்க்கட்சியான அதிமுக நேற்று தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டது. 

இந்தநிலையில், சேலத்தில் விடியல் தருவதாக மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டி அதிமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். 

இதனையடுத்து சேலத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி போராட்டம் நடத்தியது, கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறியதாக எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாத இதை கண்டித்து சேலத்தில் அதிமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Advertisement