தமிழகம்

காரில் வைத்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கார் மெக்கானிக்.! அதிர்ச்சி சம்பவம்

Summary:

காரில் வைத்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கார் மெக்கானிக்.! அதிர்ச்சி சம்பவம்

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் அதனை தடுக்க பல்வேறு சட்டங்களை இயற்றியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளையும் வழங்கி வருகிறது. ஆனாலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாள்தோறும் நடந்து வருகிறது. இந்தநிலையில், தஞ்சாவூர் அருகே பள்ளிக்கு அழைத்து செல்வதாக கூறி காரில் வைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மெக்கானிக்கை போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தஞ்சாவூரில் உள்ள ஒரு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தினமும் பேருந்தில் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று மாணவி பள்ளிக்கு செல்லும் நேரத்தில் வரும் பேருந்தை தவற விட்டுள்ளார். உடனே மாணவியின் பெற்றோர் அவர்களது உறவினரான கார் மெக்கானிக் அக்பர் அலி என்பவரிடம் தங்கள் பிள்ளையை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு கொண்டு சென்று விடுமாறு கூறியுள்ளனர்.

இதனையடுத்து அக்பர்அலி தனது இருசக்கர வாகனத்தில் மாணவியை அழைத்து கொண்டு தஞ்சை நோக்கி சென்றுள்ளார். அப்போது ஒரு இடத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி, மாணவியிடம் பெட்ரோல் தீர்ந்து விட்டதாக கூறி அங்கிருந்த ஒரு காரில் மாணவியை ஏற்றிக்கொண்டு அக்பர் அலி சென்றுள்ளார். அப்போது பள்ளிக்கு மாணவியை அழைத்து செல்லும் வழியில், காரில் வைத்தே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார்.

இந்தநிலையில் வீடு திரும்பிய மாணவி நடந்த சம்பவங்களை அவரது  பெற்றோர்களிடம் கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் உறவினர்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடரபாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அக்பர் அலியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Advertisement