
Summary:
car fired in road
சென்னை ஆலந்தூர் மெட்ரோ நிலையம் அருகில் சாலையில் சென்ற கார் தீ பிடித்ததால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை கத்திப்பாரா பாலம் அருகே ஆலந்தூர் சாலையில் சென்ற சொகுசு காரில் மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கார் கொழுந்துவிட்டு எறிந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின்படி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
காரில் இருந்த 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இந்த சம்பவத்தல் ஆலந்தூரில் இருந்து கத்திப்பாரா செல்லும் சாலையில் சற்று நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கார் பேட்டரியில் பிரச்சனை ஏற்பட்டு இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement