விபத்தில் அடிபட்டவர் காரின் மேல்புறத்தில் இருப்பது தெரியாமல் தப்பிக்க முயன்ற கார் ஓட்டுநர்! சினிமாவை மிஞ்சிய விபத்து!

விபத்தில் அடிபட்டவர் காரின் மேல்புறத்தில் இருப்பது தெரியாமல் தப்பிக்க முயன்ற கார் ஓட்டுநர்! சினிமாவை மிஞ்சிய விபத்து!


car and bike accident in chennai

கொரோனா சமயத்தில் தமிழகத்தில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறைந்துள்ளது. ஆனாலும், இந்தசமயத்திலும் விபத்து குறைந்தபாடில்லை. இந்தநிலையில் நேற்று சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சினிமாவில் போல விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்ற இளைஞர் நேற்றையதினம் அவரது இருசக்கர வாகனத்தில், வானகரம் சாலை வழியாக சென்றுள்ளார். அப்போது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்த கார் ஒன்று ரஞ்சித் சென்ற பைக் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட ரஞ்சித், விபத்து ஏற்படுத்திய கார் மீதே விழுந்துள்ளார்.

accident

விபத்தில் அடிபட்டவர் தன்னுடைய காரின் மேல்புறத்தில் தான் இருக்கிறார் என்பது தெரியாமல், கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச்செல்வதற்காக காரை ஓட்டிச் சென்றுள்ளார். இதனைப்பார்த்த போக்குவரத்து போலீசார், அந்த காரை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர்.பின்னர் காரின் மேல் காயத்துடன் இருந்த ரஞ்சித்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் விருகம்பாக்கத்தை சேர்ந்த கணேச மூர்த்தியின் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். சினிமாவில் போல நடந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.