தமிழகம்

அசுர வேகத்தில் வந்த லாரி! சுக்குநூறான குடும்பம்! நெஞ்சை உருக்கும் கொடூர விபத்து!

Summary:

Car accident three members died near thiruvalur

சென்னையை அடுத்த பம்மலை சேர்ந்தவர் சாய் சந்திரசேகர். இவரது தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் திருப்பதிக்கு காரில் சென்று சென்னை திரும்பினார். சென்னை திரும்பிவரும் வழியில் திருவள்ளுர் மாவட்டம் நாராயணபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி ஓன்று சாய் சந்திரசேகர் வந்த காரின் மீது மோதியது.

கார் மோதிய வேகத்தில் சாய் சந்திரசேகர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். மேலும் அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் திருவள்ளுர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் மனைவி மற்றும் முதல் மகன் இருவரும் உயிர் இழந்தனர்.

இரண்டாவது மகன் சிகிச்சை முடிந்து நலமுடன் உள்ளார். விபத்தில் ஒரே குடுமபத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. மேலும், விபத்தை ஏற்படுத்திய கண்டைனர் லாரி ட்ரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Advertisement