அரசியல் தமிழகம்

இதெல்லாம் கட்சிக்கு செய்யும் துரோகம்..! எங்களை யாராலும் அழிக்க முடியாது.! பொங்கி எழுந்த கேப்டன் விஜயகாந்த்.!

Summary:

இதெல்லாம் கட்சிக்கு செய்யும் துரோகம்..! எங்களை யாராலும் அழிக்க முடியாது.! பொங்கி எழுந்த கேப்டன் விஜயகாந்த்.!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல், தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக, முந்தைய தேர்தல்களில் பெற்ற வாக்குகளைவிடக் குறைந்த வாக்குகளையே பெற்றிருந்தது. இந்தநிலையில், தேமுதிகவிலிருந்து பல நிர்வாகிகள் வேறு கட்சிகளில் இணையும் போக்கு அதிகரித்துவந்தது. இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், எனது உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டிருப்பது உண்மைதான். அதற்காக தேமுதிகவுக்கு எதிர்காலமே இல்லை என யார் நினைத்தாலும் அது தவறான எண்ணம்., கட்சியை விட்டுச்செல்பவர்கள் இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை உணரும் நாள் வரும்.  மூளைச்சலவை செய்வோரின் பேச்சு, ஆசை வார்த்தைகளை நம்பி தேமுதிகவை விட்டுச்செல்வது கட்சிக்கு செய்யும் துரோகம்.

100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது.  தேமுதிகவுக்கு எதிர்காலம் இல்லை என யார் நினைத்தாலும் அது தவறான எண்ணம். கழகம் நிச்சயம் வேரூன்றி இருக்கும். கழகம் வளர்ச்சிப்பாதையை நோக்கி செல்வதற்கு தொண்டர்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.


Advertisement