தமிழகம்

ஓட்டு யாருக்கு போட்டீங்க? வாக்காளர்களை மிரட்டி தோல்வியடைந்த வேட்பாளர்கள் செய்த காரியம்! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Summary:

candidate blackmailed people in ariyakudi

இராமநாதபுரம் மாவட்டம் அரியக்குடி பகுதியில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் ஒருவர், எனக்கு ஓட்டு போடுவதாக தன்னிடம் பணம் பெற்ற கிராம மக்களை அழைத்து வந்து எனக்குத்தான் ஓட்டுப் போட்டோம் என சத்தியம் செய்யுங்கள் எனக்கூறி மிரட்டிய வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

அரியக்குடி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நான்கு பெண்கள் போட்டியிட்டனர். மேலும் அவர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறி தங்களுக்கு ஓட்டுப் போடுமாறு கிராம மக்களிடம் பணம் கொடுத்துள்ளனர். இந்நிலையில் தேர்தலில் ஒருவர் வெற்றி பெற்று மற்ற மூன்று பெண்களும் தோல்வியடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து அவர்கள் தாங்கள் பணம் கொடுத்த கிராம மக்களை ஊர் மத்தியில் உள்ள சமுதாயக் கூடம் ஒன்றிற்கு அழைத்துச் சென்று அங்கு சேவல் ஒன்றை அறுத்து அதன் ரத்தத்தின் மீது தங்களுக்கு தான் ஓட்டு போட்டோம் என்று சத்தியம் செய்யும்படி மிரட்டியுள்ளனர். இதனை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது. மேலும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement