தமிழகம்

2 தலைகள், 4 கண்கள்..! அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த அதிசய கன்றுக்குட்டி..! வைரல் வீடியோ.!

Summary:

Calf born with two heads 4 eyes in kanyakumari

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டியை அப்பகுதி மக்கள் வியந்து பார்த்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் பாறசால என்னும் பகுதியில் வசித்துவரும் பாஸ்கர் என்கிற விவசாயி.

இவர் வளர்த்து வரும் பசுமாடு ஓன்று சமீபாத்தில் கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. புதிதாக பிறந்துள்ள அந்த கன்றுக்குட்டி இரண்டு தலைகள், நான்கு கண்கள், இரண்டு நாக்குகள் என பார்பதற்க்கே மிகவும் வித்தியாசமாக உள்ளது. இதனை அப்பகுதி மக்கள்பலரும் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

மரபணு ரீதியாக ஏற்படும் மாற்றங்களே இதுபோன்று உயிரினங்கள் வித்தியாசமாக பிறக்க காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் மிகவும் வித்தியாசமாக பிறந்துள்ள இந்த கன்றுக்குட்டியை பற்றி தகவல் அறிந்து வந்த கால்நடை மருத்துவர்கள் மற்றும் பராமரிப்பு அதிகாரிகள், பாஸ்கரனின் வீட்டு கன்றுக்குட்டி பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.


Advertisement