பேருந்துகள் முழுவதும் கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட்டு, பாதுகாப்புடன் இயங்கும் பேருந்து போக்குவரத்து!

பேருந்துகள் முழுவதும் கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட்டு, பாதுகாப்புடன் இயங்கும் பேருந்து போக்குவரத்து!


buses-start-from-today

மாவட்டங்களுக்கிடையே இன்று முதல் பேருந்துகள் இயங்கப்படுகின்றன. இதேபோல் சென்னையில் இருந்து மதுரை, கோவை, நெல்லை உள்பட தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் விரைவு பேருந்து சேவையும் இன்று முதல் தொடங்கியுள்ளது.

கொரோனா காரணமாக தமிழகத்தில் பேருந்து, ரயில், விமானம் உள்ளிட்ட போக்குவரத்து முடக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் நலன் கருதி ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 1-ஆம் தேதி முதல் மாவட்டத்துக்குள் மட்டுமே பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது. 

bus

இந்த நிலையில் மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து இன்று  முதல் மாவட்டங்கள் இடையே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்தநிலையில், வெளியூர் செல்லும் பேருந்துகளில்  பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு பேருந்துகளின் உள்ளேயும், வெளியேயும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழகத்தில் விரைவு பேரூந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு இரண்டு தினங்களுக்கு முன்தினம்  தொடங்கியது. முதல் நாளிலேயே 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். வழித்தடங்களில் இரு சக்கர வாகனங்கள் அதிகம் இயக்கப்படுவதால் கவனமாக பணிபுரிய வேண்டும். நகரில் போக்குவரத்து நெரிசல், வேகத்தடை இருப்பதால் ஓட்டுநர்கள் கவனமுடன் பணிபுரிய வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.