சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! நீண்ட நாட்களுக்கு பிறகு பேருந்து போக்குவரத்து தொடக்கம்!

சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! நீண்ட நாட்களுக்கு பிறகு பேருந்து போக்குவரத்து தொடக்கம்!



bus transport started in chennai

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் கடந்த 5 மாதங்களாக ரயில், பேருந்து போக்குவரத்து இல்லாமல் இருந்தது. இ பாஸ் நடைமுறை கடந்த மாதம் முதல் எளிதாக்கப்பட்ட நிலையிலும் போக்குவரத்து இல்லாததால் மக்கள் அவதியடைந்தனர்.

இந்தநிலையில், தமிழக அரசு இன்று செப்டம்பர் 1 ஆம் தேதி பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்து, பேருந்துகள் மாவட்டத்துக்குள் இயங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை முதல் பொது போக்குவரத்து தொடங்குகிறது. 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. பயணிகளுக்கு பேருந்துகளில் கிருமிநாசினி கொடுக்கப்படுகிறது.

bus transport

சென்னையில் மாநகர அரசு பேருந்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மக்கள் ஆர்வமுடன் பேருந்துகளில் ஏறி பயணம் செய்து வருகின்றனர். சென்னை மாநகரப் பேருந்துகள் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. பொது போக்குவரத்து தொடங்குவதன் காரணமாக சென்னை காவல்துறையில் 15 ஆயிரம் காவலா்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.